லக்னோ மனக் நகரைச் சேர்ந்தவர் பேக்கரி உரிமையாளர் வீரேந்திர யாதவ்( 44) இவர் பக்கத்து வீட்டுக்காரருடைய துன்புறுத்தலுக்கும், காவல்துறையின் அலட்சியத்திற்கும் ஆளானதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறப்பதற்கு முன்பாக இவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சுஜித யாதவ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரிடம் இருந்து தொடர் துன்புறுத்தல்கள் வந்தது. வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு சாய்வு கட்டுவதில் இருந்து தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் உத்தரவை மீறி சட்டவிரோத கட்டுமானத்தை செய்து வந்தார்கள் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீரேந்திர யாதவ் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தார்கள். இதுகுறித்து வீரேந்திர யாதவ் மனைவி கூறுகையில், “பொய் வழக்கு தொடர்பான அறிவிப்பை பெற்ற போது என்னுடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் .தன்னுடைய மகளின் திருமணத்தை இது பாதிக்கும் என்றும், சமூகத்தில் நல்ல பெயரை கெடுக்கும் என்றும் அவர் அஞ்சினார். இதன் காரணமாக தான் அவர் விஷம் குடித்தார் என்று கூறியுள்ளார் .மேலும் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
