உத்திரபிரதேசம் மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் நபர் ஒருவரின் வயிற்றில் டஜன் கணக்கான கரண்டிகள், பல் துலக்கும் பிரஷ்கள், பேனாக்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியாம் குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரை அவருடைய குடும்பத்தினர் போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார்கள். இதனால் கோபமடைந்த ஷியாம் எக்கு கரண்டிகள், பல் துலக்கும் பிரஷ்கள், பேனாக்களை சாப்பிட தொடங்கியுள்ளார்.
இதனால் சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அப்போது அவருடைய வயிற்றிலிருந்து ஏராளமான கரண்டிகள், பிரஷ்கள், பேனாக்கள் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது .மொத்தம் 29 கரண்டிகள், 19 பிரஸ்கள், இரண்டு கூர்மையான பேனாக்கள் மீட்கப்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் இந்த பிரச்சினை பெரும்பாலும் உளவியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. தற்போது நோயாளி ஆரோக்கியமாக உள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்கள்.
