காலாண்டு விடுமுறை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 26 நாளையுடன் முடிவடையும் நிலையில் செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.

வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் இரண்டாம் பருவம் அக்டோபர் 6ம் தேதியே தொடங்கிவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் பள்ளி திறப்பு நாளான அக்டோபர் ஆறாம் தேதி அன்று மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏதுவாக காலாண்டு விடுமுறைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.