நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் விஜயை எதிர்த்து நீங்க போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான் விஜயை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு அண்ணனாக தம்பிக்கு என்ன அறிவுரைகளை சொல்ல வேண்டுமோ அதைத்தான் சொல்கிறேன். தம்பி விஜய் மீது உள்ள அக்கறையால் தான் அவரை விமர்சிக்கிறேன்.
இப்போது விஜய் அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் வேறு அரசியல் கட்சிகள் எடுத்து சொல்வார்கள். தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். தமிழக வெற்றி கழகத்தினர் விமர்சிப்பதை பார்த்து ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான். பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் கொள்கை வித்தியாசம் என்ன? கொள்கை வேறு அரசியல் வேறு கிடையாது. கொள்கையே அரசியல்.
பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கையை நண்பனா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மனசாட்சி இல்லாமல் மத்திய அரசு வரி விதிக்கிறது. மக்களுக்கு சுமை என்று தெரிந்தும் ஜிஎஸ்டி வரி விதித்தது ஏன்? ஜிஎஸ்டி கொண்டு வந்ததற்காக அரசு மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
