“என் நண்பருடன் உல்லாசமாக இருக்கணும்…” காதலியை ரூமுக்கு அழைத்துச் சென்ற வாலிபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் வலைவீச்சு…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

சென்னை மாவட்டம் வேளச்சேரியில் உள்ள மாலில் நிரூபன்(29) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணுடன் நிறுவனத்தை பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். சம்பவம் நடந்த அன்று நிரூபன் தனது காதலியை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்ற பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தார்.

பின்னர் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது நிரூபன் தனது நண்பருடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என காதலியை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

   

அப்போது கோபத்தில் நிரூபன் தனது காதலியை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து வந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிரூபனை தீவிரமாக தேடி வருகின்றனர்.