ஓடும் ரயில் மீது ஏறி சாகசம் செய்ய நினைத்த பெண்… நொடிப் பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்களை பார்க்கும்போது நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரயில் அதிவேகமாக செல்கிறது. அந்த வேகத்தில் பெண் ஒருவர் ரயிலின் மேலே ஏற முயற்சிக்கின்றார். இதனை காண ரயிலில் நின்ற ஒருவர் தன்னுடைய மொபைல் கேமராவில் இந்த காட்சியை பதிவு செய்கிறார். ஆனால் ரயிலின் மேலே செல்லும்போது அவர் மின்னழுத்த கம்பியை தொட்டு தவறி விழுந்து பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்துகின்றார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்தவர் கூட அதிர்ச்சி அடைந்து பார்க்க முடியாமல் பயந்து போனார்.

இது போன்ற ஆபத்தான செயல்கள் புதியது கிடையாது. இதற்கு முன்பும் பல ரயில் தண்டவாளங்களில் ஆபத்தான செயல்களை பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதில் பலரும் உயிரிழப்பை சந்தித்துள்ளனர். இந்த வீடியோ மக்களிடையே பல்வேறு விவாதத்தை எழுப்பி உள்ளது. சிலர் சமூக ஊடக பழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். இது போன்ற செயல்கள் பாதுகாப்பற்றது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயில் மீது ஏறி சாகசம் செய்ய நினைத்து பயமுறுத்தும் விபத்தை சந்தித்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.