அதிர்ச்சி..! ஆம்லெட்டுடன் சேர்த்து வாழைப்பழம் சாப்பிட்ட நபர்… சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!!

By Soundarya on புரட்டாதி 24, 2025

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே பாருடக்கா பகுதியில் வசித்து வந்தவர் விஷாந்த் டிசோசா(52). தொழிலாளியான இவர் சாலையோர உணவகம் ஒன்றில் ஆம்லெட் உடன் வாழைப்பழத்தையும் முழுமையாக சாப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் . அவருடைய தொண்டையில் ஆம்லெட் வாழைப்பழம் சிக்கியதால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.