நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடி செய்த சூர்யா வீட்டு பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்த பெண் உட்பட நான்கு பேரை கைது செய்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தியதில், குறைந்த விலையில் நகைகள் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
