அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் 83 வயது முதியவர் ஒருவர் மேலாளர் பெண்ணை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாமி கடற்கரையில் உள்ள குடியிருப்பின் பத்தாவது மாடியில் வசிக்கும் குலாவும், அவரது காதலியின் ரோஸின்டா அரேல்லானாவும், மேலாளர் ஆர்டிசுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கோபமடைந்த குலா திடீரென்று கத்தியை எடுத்து அந்த மேலாளர் பெண்ணின் மார்பு மற்றும் தலைப்பகுதியில் பலமுறை குத்தியுள்ளார். இதனை தடுத்து நிறுத்திய போதும் கோபம் குறையாமல் மீண்டும் கத்தியால் அந்த பெண்ணை தாக்கம் முயன்றுள்ளார்.
அப்போது குலாவின் காதலி இடையில் வந்து தடுத்ததால் அவர் அமைதி அடைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த முதியவர் தனது காதலியின் குடியிருப்பு பகுதியில் மறைந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த கொடூர சம்பவம் பதிவாகிய சிசிடிவி கண்காணிப்பு காட்சி மற்றும் தாக்குதல் ஏற்பட்ட ரத்தக்கரை ஆகியவை அனைத்தும் அவருடைய குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுளோரிடா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
