கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி(28), இயானி ஹிமா(25) ஆகிய பெண்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலவையில் உள்ளது. பிரபல ரவுடிகளான இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்திருந்தனர். ஜாமீனில் வெளியே வந்த இருவரும் ஆறு மாதத்திற்கு தினமும் கொடுங்கல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் திருச்சூரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுவாதி, இயானி ஹிமா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருச்சூர் சரக டிஐஜி ஹரிசங்கர் இருவரும் ஒரு வருடத்திற்கு திருச்சூர் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
