“என் மனைவியை குத்தி கொன்னுட்டேன்” பேஸ்புக் Live-இல் வீடியோ போட்ட கணவர்… அதிர்ச்சியில் மூழ்கிப்போன இணையதளம்..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரில் வசித்து வருபவர் ஐசக். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஷாலினி நடத்தையில் ஐசக் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும் ஷாலினி தனக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்ததாகவும் குற்றம் சாட்டி வந்துள்ளார். இதனையடுத்து ஷாலினி வீட்டை விட்டு வெளியேறி தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில்  சம்பவத்தன்று ஐசக் ஷாலினி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சமையலறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஷாலினியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் . ஷாலினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார் .மேலும் தன்னுடைய செல்.போனில் பேஸ்புக் லைவ் வீடியோவில் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் அவர் அறிவித்தார் பின்பு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து ஐசக்கை கைது செய்த காவல் துறையினர் ஷாலினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.