சீச்சீ…! மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கு இடையே சிறுநீர் கழித்த நபர்…. ஷாக்கான பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் தினமும்வ பல்வேறு வகையான வீடியோ வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் மெட்ரோ பெட்டிகளுக்கு இடையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வேஷ்டி அணிந்த ஒருவர் இரண்டு மெட்ரோ பெட்டிகளுக்கு இடையிலான சந்திப்பு அருகே அமர்ந்து சிறுநீர் கழிக்கிறார். இதனை பார்த்ததும் அங்கிருந்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபருக்கு விதிகள் மற்றும் பொது ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவை பார்த்த ஒருவர் இது அவரது வீட்டுக்கு கழிப்பறை அல்ல மெட்ரோ ரயில் பெட்டி என்பதை அந்த நம்பர் மறந்து விட்டதாக தெரிகிறது என கமெண்ட் செய்துள்ளார். இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.