தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி நேற்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.
பரப்புரையின் போது தொண்டர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது போன்ற அறிவுரைகளை வழங்கியிருந்தார் விஜய். ஆனாலும் அதையும் மீறி ரசிகர்கள் செயல்பட்டார்கள். இந்நிலையில் திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்த TVK நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளன.ர் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாகவும் அனுமதி இல்லாமல் செயல்பட்டதாக கூறி கிரேன் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
