“தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுத்துருச்சு….” சுரங்கத்தில் 8 வைரங்களை தோண்டி எடுத்த பெண்… குஷியில் குடும்பத்தினர்….!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2025

Spread the love

மத்திய பிரதேச மாநிலத்தில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பன்னா வைர சுரங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள 8 மீட்டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு 200 ரூபாய்க்கு ஏலம் விடப்படும். அதில் மக்கள் தோண்டி எடுக்கும் வைரத்தை பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்வார்கள். 3 மாதங்களுக்கு ஒரு முறை வைர ஏலம் நடைபெறும் போது கண்டெடுக்கப்பட்ட வைரம் ஏலத்தில் விடப்பட்டு 11 % ராயல்டி, 1 % டிடிஎஸ் என மொத்தம் 12 சதவீதம் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை அந்த வைரத்தை கண்டெடுத்தவருக்கு கொடுக்கப்படும்.

சமீபத்தில் ரச்னா கோல்டர் என்ற பெண் தொழிலாளி அந்த சுரங்கத்திலிருந்து எட்டு வைரங்களை கண்டுபிடித்துள்ளார். அதில் மிகப்பெரிய வைரம் 0.79 காரட் எடை உடையது. இதுகுறித்து வைர நம்புனர் அனுபம் சிங் கூறும்போது, ரச்னா கண்டுபிடித்த 8 வைரங்களில் 6 வைரங்கள் அதிக தரம் கொண்டது. இரண்டு கற்கள் நிறமற்றது. அந்த வைரங்களை மாவட்ட வைர அலுவலகத்தில் ரச்னா டெபாசிட் செய்துள்ளார். இது பல லட்ச ரூபாய்க்கு ஏலம் விட வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார். ரச்னாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஏல விற்பனை மூலம் கிடைக்கும் தொகை அவரது குடும்பத்தினருக்கு பெரிய உதவியாக இருக்கும்.