பெற்றோருக்கிடையே சண்டை… சோகத்தில் இருந்த 13 வயது சிறுமி…. நைஸாக டீ கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர் செய்த வேலை…. அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 21, 2025

Spread the love

திருப்பூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பாலமுருகன் (36) என்பவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் இருந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் வீட்டின் அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தபோது பூமாலூரை சேர்ந்த பாலமுருகன் சிறுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது போல நடித்து தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் மயங்கி விழுந்த சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு வீட்டுக்கு வந்த சிறுமிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் உடனே பெற்றோர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

   

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாலமுருகன் கொடுத்த தேநீரை குடித்த பிறகு தனக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் பிறகு அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் சிறுமியை நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.