சீச்சீ…! அப்பா ஸ்தானத்தில் இருந்து பண்ற காரியமா இது…? “14 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து…” நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்(39). இவரது மனைவி தனலட்சுமி. தனலட்சுமியின் அக்கா தனது கணவரை பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் அவரது 14 வயது மகளை தனலட்சுமி வளர்த்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை வினோத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வினோத் கொத்தனார் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது அக்கா மகளை கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது தனலட்சுமிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வினோத்தை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வினோத்துக்கு 35 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 40000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.