ஒடிசா மாநிலம் புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யும் போது ஒரு குடும்பம் ‘ரயில்வே பெட்ஷீட்களை’ திருடியதாகக் கூறப்படும் ஒரு வைரல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பூரிக்கும் புது தில்லிக்கும் இடையே இயங்கும் அதிவேக ரயிலான புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகச் செல்லும் மிகவும் தேவைப்படும் பாதைகளில் ஒன்றாகும். இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் பயணம் செய்துள்ளது.
Traveling in 1st AC of Purushottam express is a matter of pride itself.
But still people are there who don't hesitate to steal and take home those bedsheets supplied for additional comfort during travel. pic.twitter.com/0LgbXPQ2Uj
— ଦେବବ୍ରତ Sahoo 🇮🇳 (@bapisahoo) September 19, 2025
இதனையடுத்து இரண்டு பயண டிக்கெட் பரிசோதகர்கள் (TTE) மற்றும் பிற ரயில்வே ஊழியர்களால் அந்த குடும்பம் சூழப்பட்டுள்ளது. பெட்ஷீட்களை திருடியாக அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் கூடுகிறர்கள். அப்போது அந்தப் பெண் தயக்கத்துடன் ஒரு பையில் இருந்து படுக்கை விரிப்புகளை வெளியே எடுக்கிறார். இதுகுறித்து வெளியான வீடியோவில், “புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் முதல் ஏசியில் பயணம் செய்வது பெருமைக்குரிய விஷயம். ஆனால் பயணத்தின் போது கூடுதல் வசதிக்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகளைத் திருடி வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தயங்காத மக்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி வைரலாகிவிட்டாலும், சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
