திடீர் மின்தடை…! பேசி கொண்டிருந்த போதே ஆள் மாற்றி நண்பரை கொலை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் நகர் பகுதியில் சேர்ந்தவர் கவியரசன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்த கவியரசனை கடந்த 2021 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக பாஜக இளைஞரணி சேர்ந்த காளிதாசன் என்பவர் கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட காளிதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிய வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த காளிதாஸ் அந்த பகுதியில் சகஜமாக சுற்றி திரிந்ததால் கவியரசனின் நண்பர்கள் ஆத்திரமடைந்தனர். நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே காளிதாஸ் கொத்தனாரான நந்தகுமார் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அந்த சமயம் திடீரென வந்த 6 மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

   

அடுத்த நொடியே காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் மர்ம நபர்கள் அடையாளம் தெரியாமல் நந்தகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளையராஜா, ஹரிஹரன், சிற்றரசன், தோனி, துரைராஜ், மணி தேவா ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்தடையால் ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.