ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகள்…! “வேகமாக ஓடி வந்த சிங்கம்…” அடுத்து என்னாச்சு தெரியுமா…? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2025

Spread the love

காட்டு விலங்குகள் என்றாலே பார்ப்பதற்கு பயமாக இருக்கும். அப்படிப்பட்ட விலங்குகள் நமக்கு மிக அருகில் வந்து விளையாடுவதை உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. சுற்றுலா பயணிகள் சிலர் ஜீப்பில் சபாரி செல்வதை அந்த வீடியோவில் பார்க்கலாம். அப்போது ஒரு பெண் சிங்கம் திடீரென ஜீப்பில் ஏறுகிறது.

அது தாக்கும் என சுற்றுலா பயணிகள் அச்சத்தில் இருந்த சமயத்தில் சிங்கம் அவர்களை தாக்காமல் விளையாடியது. பின்னர் மற்றொரு சிங்கமும் வந்து சுற்றுலா பயணிகளுடன் நன்றாக பழகியது. அதனை பிற சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்தனர். இதுவரை 1.7 மில்லியன் பார்வையாளர்களை அந்த வீடியோ கடந்துள்ளது. வீடியோவை பார்த்த ஒருவர் இது மரணத்தை நேரில் சந்தித்த உண்மையான சந்திப்பு ஆனால் அதிர்ஷ்டவசமாக பெண் சிங்கம் அமைதியாக இருந்தது என கமெண்ட் செய்துள்ளார்.