இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. இயற்கையின் அதிசயங்களை சில சமயங்களில் இணையம் நமக்கு வெளிப்படையாக காட்டுகின்றது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ பாம்புகளின் சக்தியை மீறிய ஒரு காட்டு விலங்கின் துணிச்சலை வெளிக்காட்டி உள்ளது. பாம்புகள் தன்னுடைய விஷம் காரணமாக மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படுகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிய அபாயம் இருந்தாலும் தற்போது வைரலாகி உள்ள வீடியோ அந்த நம்பிக்கையை அப்படியே மாற்றி உள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு சிறிய காட்டு விலங்கு பாம்பு ஒன்றை நேரடியாக தாக்கி அதனை உயிருடன் மென்று விழுங்க கூடிய காட்சி பதிவாகியுள்ளது. பாம்பு தாக்க முயற்சித்த போதும் அந்த விலங்கு அதனை தவிர்த்து பதிலடி கொடுத்து விரைவாக தன்னுடைய வாயில் பிடித்து விழுங்க தொடங்கியது. மனிதர் உணவு சாப்பிடுவது போல பாம்பை மென்று அசால்ட் ஆக அந்த விலங்கு சாப்பிட்டு விட்டது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) September 16, 2025
