தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே திமுக இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கோவையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கான மவுசு கூடி இருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலற செய்துள்ளது. இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களம் இறக்கவும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB இன் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
