ஜூஸ் குடிக்கும்போதே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்த வாலிபர்… அடுத்த நொடியே நிகழ்ந்த அதிர்ச்சி மரணம்…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

சமீபகாலமாகவே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வயதானவர்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டன. ஆனால் தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றன. மருத்துவ உலகில் தற்போது காய்ச்சல் மற்றும் தலைவலி போன்று மாரடைப்பு என்பதும் சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் ஜூஸ் குடித்து கொண்டு இருந்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஒழுங்கற்ற உணவு முறைதான் என்றும் சமீப காலமாக ஜங்க் ஃபுட் கலாச்சாரம் அதிகரித்தது தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.