ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு திருமண அலுவலகத்தில் வரன் தேடி விண்ணப்பித்திருந்தார். அந்த திருமண அலுவலகம் மூலம் அவருக்கு ஒரு இளம் பெண் அறிமுகமாகி நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த திருமண அலுவலகத்தில் இருப்பவர்கள் 4 லட்ச ரூபாய் பணம் கேட்பதாக இளம்பெண் கூறியுள்ளார். மேலும் அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே உங்களை திருமணம் செய்ய முடியும் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி கார்த்திக் 4 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 20 நாட்கள் அந்த பெண் கார்த்திக்குடன் ஒன்றாக வாழ்ந்தார். பின்னர் வெளியே சென்று வருவதாக கூறிய இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் இளம் பெண்ணையும் அவரது நண்பர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார்.
ஆனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட அந்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இறந்தவர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
