அச்சோ செம க்யூட்… சின்ன வயசிலேயே இம்புட்டு அறிவா?… ஆங்கில மாதங்களை மழலைப் பேச்சில் அழகாக சொல்லும் குழந்தை… காண்போரை ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்களை கவரும் வகையில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி பலரையும் மகிழ்விக்கிறது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் செய்யும் சிறு சிறு சேட்டைகளை பார்த்து மனதில் எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் அது நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில் அம்மா தன்னுடைய குழந்தைக்கு வழிகாட்ட ஆங்கில மாதங்களின் பெயரை அந்த குழந்தை அவ்வளவு அழகாக சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. மிகச் சிறிய வயதிலேயே ஜனவரி, பிப்ரவரி என்ற தெளிவாக சொல்லும் குழந்தையின் திறமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை சரியாக சொல்ல அம்மா உற்சாகமாக பாராட்டுகிறார். தவறான பதில் சொன்னால் கோபமடையாமல் மென்மையாக வழிகாட்டுகிறார். இந்த உரையாடல் பெற்றோர் மற்றும் குழந்தை உறவின் அழகையும் பாசத்துடன் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் எவ்வளவு விரைவாக கற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vihaan singh Chauhan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vihaan_15dec)