ஷாக் நியூஸ்… AI தொழில்நுட்பத்தால் அழிய போகும் 90 மில்லியன் வேலைகள்… ஆனால் இந்த 7 வேலைகளுக்கு மட்டும் அதிக டிமாண்ட்… வெளியான ஆய்வறிக்கை…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

இன்றைய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் யுகம் உலக வேலை சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகின்றது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளை விரைவாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக தொழில் முறை மாற்றங்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் 90 மில்லியன் வேலைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதேசமயம் 170 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பில் ஒரு மறு வரையறை ஏற்படும் என கூறப்படுகிறது.

டேட்டா ஸ்பெஷலிஸ்ட்: பெரிய அளவிலான தரவை சேகரித்து பகுப்பாய்வு செய்து, உத்திகள் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவோர், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறைகளில் இவர்களுக்கு அதிக தேவை தற்போது உள்ளது.

   

பின்டெக் பொறியாளர்கள்:

   

நிதி மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து பிளாக் செயின், டிஜிட்டல் பேமென்ட் மற்றும் வங்கி செயலிகள் ஆகியவற்றில் புதுமைகளை உருவாக்குவோர். வங்கிகள் மற்றும் கட்டிட நிறுவனங்களில் இவர்களுடைய தேவை தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

 

AI மற்றும் மெஷின் லேர்னிங் நிபுணர்கள்:

சாட்பாட்கள், ஓட்டுநர்கள் இல்லாத கார்கள், முக அங்கீகாரம், முன் கணிப்பு கருவிகள் போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க கூடியவர்கள். வருகின்ற 230 ஆம் ஆண்டளவில் இவர்களுடைய தேவையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.

மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குநர்கள்:

வணிகர்களும் நுகர்வோரும் தினசரி நம்பும் பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களை உருவாக்குபவர்கள். இது ஒரு நீண்டகால வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய துறையாக கருதப்படுகிறது.

சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்:

ஹேக்கிங் மற்றும் தரவு மீறல்களில் இருந்து நிறுவனங்களை காப்பாற்றக் கூடியவர்களாக இருப்பதால் வங்கிகள், அரசு மற்றும் ஐடி துறைகள் இவர்களை அதிகமாக பணியமருத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

டேட்டா கிடங்கு நிபுணர்கள்:

பெரிய அளவிலான தரவை திறமையாக சேமித்து நிர்வகிக்கக்கூடிய இவர்களுக்கு நிதி, சில்லறை விற்பனை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.

மின்சாரம் மற்றும் தன்னாட்சி வாகன நிபுணர்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் சுய ஓட்டுனர் கார்கள் உருவாக்குவதில் இவர்களுடைய பங்களிப்பு அதிகமாக இருப்பதால் டெஸ்லா மற்றும் உபர் போன்ற நிறுவனங்கள் இந்த துறைகளில் அதிகமாகவே முதலீடு செய்து வருகின்றன.

இன்றைய டிஜிட்டல் யுகத்தின் வேலைவாய்ப்பு மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைந்து புதிய வேலைவாய்ப்புகளையும் சவால்களையும் வெகுவாக உருவாக்குகிறது. இன்றைய மாணவர்களும் வேலை தேடுபவர்களும் இந்த மாற்றங்களை அறிந்து தங்களுடைய திறனை மேம்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகளை பெற முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.