மக்களே உஷார்….! உங்க PAN கார்டை பயன்படுத்தி யாராவது கடன் வாங்கியிருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்….? எளிய வழி இதோ…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2025

Spread the love

ஆன்லைன் மோசடிகள், திருட்டு, சைபர் குற்றங்களை தடுக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மோசடி செய்யும் நபர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்க முகவரி, பெயர், ஆதார், பான் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். முதலில் உங்களது பான் கார்டை பயன்படுத்தி யாராவது கடன் வாங்கியுள்ளார்களா என்பதை சரி பார்க்க வேண்டும். CIBIL, Experian, Equifax, CRIF High Mark ஆகிய ஆன்லைன் தளங்கள் கடன்களின் பதிவுகளை பராமரிக்கிறது. அதன் மூலம் நாம் கடன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வலைதளங்களில் வெளியிடப்படும் அறிக்கையில் தவறான கணக்கு விவரங்கள், அதிகரிக்கப்படாத கடன் விசாரணைகள், விண்ணப்பிக்கப்படாத கடன்கள், அறிமுகம் இல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற தகவல்களை நாம் சரி பார்க்க வேண்டும். ஒருவேளை மோசடி நடந்திருப்பதை கண்டறிந்தால் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கடன் வழங்குனரிடம் கடன் பெறவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டதை அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க காவல்துறை அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம்.