தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து தூத்துக்குடியில் அக்.11-ம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விஜய் வரும்போது தவெக கட்சியினர் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறை எச்சரித்துள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கான அனுமதியை காவல்துறை பாரபட்சமின்றி பரிசீலிக்க தவெக நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.
