புதிய பரபரப்பு… பாஜக கூட்டணியில் திடீர் மாற்றம்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்…!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற காலம் போய் தற்போது விஜயும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் இருக்கும் பிரச்சனையை விரைவில் சமூகமாக தீர்த்து பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புயலுக்கு பின் அமைதிபோல தங்கள் கூட்டணி பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று NDA கூட்டணி சலசலப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பேரவை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், கடைசி நிமிடங்களில் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதிமுக மற்றும் பாமக உட்கட்சி விவகாரங்கள் பாஜக தலையிடாது எனவும் கூறியுள்ளார். NDA கூட்டணியில் இருந்து சமீபத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விலகிய நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது