பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பின் பொழுது இரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனே அவரை மீட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ ஷங்கர், அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
