“என் கண் முன்னாடி உயிர் போகல; அதான் வருத்தம்…” ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி…. சிரித்துக்கொண்டே பதில் கூறிய கணவர்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் அரவிந்த். இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு அரவிந்த் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நந்தினிக்கும் அன்குஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தினி தனது காதலரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அரவிந்த் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் நந்தினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நந்தினி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரித்த போது அவர் இனி எந்த சண்டையும் போட வேண்டாம் என சிரித்தபடியே கூறியுள்ளார்.

   

மேலும் மனைவியின் உயிர் தன் கண் முன்னால் பிரியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரிந்தது தான் மன வேதனையை ஏற்படுத்தியதாக அரவிந்த் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு நந்தினியின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.