“உன் அப்பா வரணும்னா நான் சொல்றதை கேளு…” 17 வயது சிறுமியை சீரழித்த போலீஸ் ஏட்டு…. பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெட்டிக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புகாரில் அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கும் பிரபு என்பவர் கடை உரிமையாளரின் 17 வயது மகளை பார்த்து உன் அப்பாவை இந்த வழக்கில் இருந்து நான் ரிலீஸ் செய்கிறேன். அதற்கு நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் எனக் கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்தும் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது அறையில் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், சாராயம், கஞ்சா, ஆணுறைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.