வீட்டிற்கு வந்த மருமகள்…! பட்டப்பகலில் மாமனார் செய்த காரியம்…. ஷாக்கான கணவர்….. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2025

Spread the love

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரது மகன் சதீஷ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சதீஷ்-ராஜபிரியா தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜப்பிரியா அப்பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பழனிசெட்டி பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் வீட்டு கதவை திறக்க முயன்ற போது துரைசிங்கம் அங்கு வந்து மருமகளுடன் தகராறு செய்து கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் ராஜபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் துரைசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.