ஏங்க, கூமாபட்டி தங்கபாண்டிக்கு கை முறிவு… மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் ஷாக்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

இணையத்தில் எது வைரலாகும்? எது வைரல் ஆகாது என்பது குறித்து யாராலும் அவளது எளிதில் கணித்து விட முடியாது. சில வருடங்களுக்கு முன்பு வரை பெரிய திரைக்குள் நுழைவதற்கு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது அனைவருடைய கைகளிலும் செல்போன் இருப்பதால் கையில் கிடைக்கும் விஷயங்களை பேசி ட்ரெண்ட் ஆகிவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் பிரபலமானவர்தான் கூமாபட்டி நாயகன்.

ஏங்க, என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கூமாபட்டி தான். தேனிக்கு அருகில் இருந்த இந்த கிராமத்தைப் பற்றி வீடியோ வெளியிட்டு ஏங்க எங்க கூமாபட்டியை பாருங்க என்று பேசி பிரபலமானவர்தான் தங்கப்பாண்டி ஜீவானந்தம். இந்தப் பக்கம் பார்த்தா அந்தமான் காடு, அந்தப் பக்கம் பார்த்தா காஷ்மீர், வாழனும்ங்க என்று இவர் பேசியது பெரிதாக வைரலானது. கூமாபட்டி ரில்ஸ் போட்டு பிரபலமான தங்கபாண்டி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சாந்தினியுடன் சேர்ந்து கலக்கி வருகின்றார்.

   

இதில் இருவரும் சேர்ந்து செய்யும் அட்ரா சிட்டிக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரொமான்ஸ் நிறைந்த காட்சிகளில் நடித்து வருகின்றன. இப்படியான நிலையில் கூமாபட்டி தங்க பாண்டிக்கு பேருந்தில் வரும்போது கதவு இடித்து கையில் முடிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

News7 Tamil பதிவைப் பகிர்ந்துள்ளார் (@news7tamil)