இது அப்பட்டமான பொய்… அதிமுகவை காப்பாற்றியது அந்த 122 MLA-க்கள் தான்… பாஜக அல்ல.. EPS -க்கு டிடிவி பதிலடி..!!

By Soundarya on புரட்டாதி 16, 2025

Spread the love

நேற்று சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி வைக்க காரணம் ஜெயலலிதா மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான். அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது.

நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய EPS  நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடியின் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.  அதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தவிர பாஜக அல்ல. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததால் தான் பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாத பழனிச்சாமி நன்றியை பற்றி பேசுகிறார் .ஆட்சியை காப்பாற்றிய 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார்.