தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு புதிய ஆட்சியை தர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றார்.
அதேசமயம் மாற்று கட்சியினர் பலரும் மாறி மாறி தேர்தல் நெருங்கும் சூழலில் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாற்று கட்சி நிறை இணைக்கும் பணியில் பல கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வகையில் திமுகவில் தமிழக வெற்றிக்கழகத்தினர் பலர் இணைந்து வருவதாக கட்சியின் எம்எல்ஏ நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இணைவதாக கூறிய அவர் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் 58 ஆயிரம் உறுப்பினர்களை கூடுதலாக இணைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் .
