“அடுத்த நொடி நிச்சயமில்லா வாழ்க்கை”… முதுகு வலிக்கு Sick Leave கேட்ட ஊழியர்… அடுத்த 10 நிமிடத்தில் நடந்த விபரீதம்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதுகு வலி காரணமாக மேலதிகாரியிடம் Sick Leave கேட்ட ஊழியர் அடுத்த பத்து நிமிடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஷங்கர் (40) என்பவர் கடந்த 13ஆம் தேதி தன்னுடைய மேலதிகாரி கேவி ஐயருக்கு காலை 8.37 மணிக்கு தன்னுடைய முதுகு வலி காரணமாக அன்றைய தினம் விடுப்பு வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். உடனே மேலதிகாரியும் விடுமுறை வழங்கி ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அடுத்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு அதாவது காலை 8.47 மணிக்கு ஷங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்ட திடீரென உயிரிழந்தார். இந்தச் செய்தியை காலை 11:00 மணிக்கு மேல் அதிகாரி அறிந்துள்ளார்.

காலையில் தன்னிடம் விடுப்பு கேட்ட நபர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஷங்கர் திடீரென்று மாரடைப்பார் இறந்தார் என்பதை என்னால் சிறிதும் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கும் என கணிக்க முடியாது என்று தன்னுடைய வருத்தத்தை அவர் வெளிப்படுத்தி உள்ள நிலையில் தற்போது அந்த பதிவை இணையத்தில் வைரலாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது