செங்கோட்டையன் விவகாரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை EPS ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால், அவர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மாற்றியமைக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்திக்கும் பிளான் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்றும், மழை காரணமாக தான் பரப்புரை பயணம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஜெயலலிதா மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான். அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
