ஜெயலலிதா இறந்த பிறகு உதவியது பாஜக தான்… நன்றி கடனுக்காகவே கூட்டணி… உண்மையை உடைத்த இபிஎஸ்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு சிலர் அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்றதாகவும் அதனைக் காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசுதான் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், நன்றி கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக விளக்கமளித்துள்ளார். பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டார்.