நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 30ம் தேதி வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சொந்த நிதி ரூ.100 கோடியை சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
