பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மணிப்பூர் சென்றார். மணிப்பூர் பயணத்தை முடித்த அவர் இன்று அசாம் சென்றுள்ளார். அசாம் மாநிலம் டோரங் மாவட்டம் சென்ற அவர் அங்கு நடைபெற்ற அரசியல் நிகச்சிகளில் பங்கு பெற்றார். அங்கு புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடி மீண்டும் அழுகிறார் என்று காங்கிரஸ் என்னை குறி வைக்கலாம். ஆனால் மக்கள் தான் என்னுடைய கடவுள். அவர்கள் முன் என் வலியை வெளிப்படுத்தாவிட்டால் நான் எங்கு செல்வேன். அவர்கள்தான் என்னுடைய குரு, கடவுள், ரிமோட் கண்ட்ரோல். என்னிடம் வேறு ரிமோட் கண்ட்ரோல் கிடையாது .என்னுடைய தாயாரை வார்த்தைகளால் அவமதித்தார்கள். நான் சிவ பக்தன். வெறுப்பு என்ற விஷத்தை நான் விழுங்குவேன்” என்று கூறியுள்ளார்.
