மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக அதிமுக எம்பி இன்பதுரை நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவில் NDA கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் இன்பதுரைக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. அத்துரையின் கொள்கைகள், திட்டங்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் நடவடிக்கைகளை சுதந்திரமாக செயல்பட ஆலோசனை குழு உறுப்பினருக்கு அதிகாரம் உள்ளது.
