இன்று ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepeல் மிகப்பெரிய மாற்றம்…. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 14, 2025

Spread the love

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்நாட்டு டிஜிட்டல் பேமெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் UPI மூலமாக  பணம் செலுத்துகின்றனர்.  மேலும் பணம் செலுத்தும் வசதியின் காரணமாக அவை அவர்களுக்கு சாதகமாக உள்ளன. UPI சிறிய தேவைகளுக்கு கூட பயன்படுத்தப்படலாம். கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்ஸ் மூலம் யூசர் இன்டர்ஃபேஸ் எளிதாக பணம் செலுத்த வசதியாக  இருப்பதால்,யுபிஐ பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி நாளை முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரும்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணம் அனுப்ப முடியும். இதனால் இன்சுரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதைப் போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் 5 லட்சம், ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் என வரம்பு உயர்த்தப்படுகிறது. இது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.