ஆம்ஸ்டர்டாம், உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்களின் விருப்பமான பானம் என்றாலே முதலில் பீர் தான். பீர் என்பது பார்லி போன்ற தானியங்களை மூலப் பொருளை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஒரு பானம். உலகின் மிகவும் பழமையான மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மதுபானம். மதுபானங்களை பிடிக்காதவர்கள் கூட பீர் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பீர் அதிகமாக குடித்தால் அவர்களை கொசு அதிகமாக கடிக்குமாம், நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கொசு கடிப்பதற்கு காரணம் பீர் குடிப்பதினால் உடலில் ஒரு வித வாசனை வருமாம் அது கொசுவை ஈர்க்குமாம். சன் ஸ்கிரீனை குறைவாக பயன்படுத்துவர்கள் தொடர்ந்து, குளிக்காமல் இருப்பவர்களையும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
