திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய், திரளான தொண்டர்களுக்கு மத்தியில் 2026 தேர்தலுக்காக தனது முதல் உரையை பேசி வருகிறார்.
இந்த நிலையில் திருச்சியில் விஜய் உரையாற்றும் போது மைக் வேலை செய்யாததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விஜய் என்ன பேசுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் தொண்டர்கள் தவித்துள்ளனர். மேலும் கேட்கல கேட்கல என்று விஜய்யை பார்த்து தொண்டர்கள் முழக்கமிட்டுள்ளனர்.
