“லண்டனில் செட்டில் ஆன மகள்” யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல்… 80 வயதிலும் இனிப்பு விற்று சம்பாதிக்கும் தம்பதி… இணையவாசிகளை ஈர்த்த முதியவரின் சோகக்கதை…!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு வயது வந்த பிறகு தங்களுடைய பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் நிலவிவரும் ஒரு பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகவே உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  சென்னையில் உள்ள லோக்கல் ரயில் நிலையத்தில் 80 வயது உடைய முதியவர் ஒருவர் இனிப்பு போளி வியாபாரம் செய்து வருகிறார். தள்ளாடும் வயதில் அவருக்கு ஏற்பட்ட சோகம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வயதான காலத்தில்  யாரையும் நம்பாமல் தன்னையும், தன்னுடைய மனைவியும் கவனித்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் அவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இவருடைய மகள் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மகள் தன்னை பார்த்துக்கொள்வார் என்று காத்திருந்த இவருக்கு 70 வயதில் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த போளியை அந்த வழியாக சென்ற  ஒருவர் சுவைத்த பிறகு அவருடைய சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் நான் முதியோர் செய்த போலியை சாப்பிட்டேன். அதில் அன்பு, தெய்வீக மனம் இருந்தது. சில சமயத்தில் நல்ல உணவுகளுக்கு பின்னர் வலியுடன் கூடிய ஒரு கதை இருக்கும். இவர்களின் துயரம் இனியும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் 33,000 பயனர்கள் லைக் செய்துள்ளது  ஒருசிலரே நாங்கள் அந்த முதியோருக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள்.