அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வாஷிங் மெஷின் தொடர்பான வாக்குவாதத்தில் இந்தியர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் மற்றும் மனைவி கண் முன்னே கொல்லப்பட்டதோடு அவரது தலையை தரையில் போட்டு உதைத்து விளையாடியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த சந்திர மௌலி நாகம்மல்லையா (50), டவுன் டல்லாசின் கிழக்கே சாமுவேல் பவுல்வர்டில் உள்ள டவுன் சூட்ஸ் விடுதியில் பணியாற்றி வந்துள்ளார். அங்கே தன்னுடைய மனைவி மற்றும் 18 வயது மகனுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் விடுதியின் அறை ஒன்றை ஊழியர்களான கோபோஸ் மற்றும் ஒரு பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வாஷிங் மெஷின் உடைந்த இருப்பதாகவும் அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் சந்திரமௌலி கூறியுள்ளார். இந்த விஷயத்தை நேரடியாக கூறாமல் சக பெண் ஊழியரிடம் கூறி தன்னிடம் மொழிபெயர்க்க செய்த சந்திர மௌலியின் நடவடிக்கையால் கோபோஸ் ஆத்திரம் அடைந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தன்வசம் வைத்திருந்த ஒரு வெட்டு கத்தியை கொண்டு வந்து அவர் சந்திர மௌலியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
படுகாயம் அடைந்த அவர் தன் மனைவியும் மகனும் இருந்த பகுதியை நோக்கி அலறி அடித்து ஓடினார். அவர்கள் பலமுறை தாக்குதலை தடுக்க முயன்றும் கோபோஸ் அவர்களை தள்ளிவிட்டு தாக்குதலை தீவிரமாக தொடர்ந்து உள்ளார். அவருடைய தலை துண்டாகும் வரை கண்கூடித்தனமாக வெட்டியுள்ளார். பார்க்கின் பகுதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதனை தரையில் போட்டு இரண்டு முறை உதைத்து தள்ளியுள்ளார். பிறகு அதனைச் சென்று குப்பை தொட்டிக்குள் போட்டுள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
