என்ன ஒரு பாசம்… மெட்ரோவில் ரயிலில் சோர்வால் தூங்கி வழிந்த அம்மா… மகன் செய்த நெகிழ வைக்கும் செயல்… உணர்ச்சிப்பூர்வமான வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் நடந்த ஒரு சிறிய நெகிழ்ச்சியான தருணம் குறித்த வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. வேலையிலும் வீட்டிலும் வேலைகளை செய்ய வேண்டி இருப்பதால் ஏற்படும் ஒரு தாயின் சோர்வை பலரும் அறிவதில்லை. தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் வேலையால் களைத்துப் போன தாய்க்கு தூக்கம் வர, அவர் சரிந்து கீழே விழலாம் அல்லது கம்பியில் முட்டிக் கொள்ளலாம். இதனை சுதாகரித்த மகன் அம்மாவைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து விட்டான்.

கழுத்தைச் சுற்றி ஒரு கையும், கம்பியின் மீதும் மற்றொரு கையையும் வைத்து அம்மாவை பத்திரமாக பிடித்துக் கொள்கிறான். அந்த சிறுவனுக்கும் தூக்கம் வருகிறது, கை வலிக்கிறது. ஆனாலும் தாய் பாசம் அனைத்தையும் வென்று விட்டது. இந்த வீடியோ வெளியாகி பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது. அழகாக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பங்கள் எவ்வாறு உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது.