புல்வெட்ட சென்ற 65 வயது மூதாட்டி… திடீரென்று வந்து தாக்கிய காட்டு நரி… சேலையால் கழுத்தை நெரித்து 20 நிமிடம் திக் திக் போராட்டம்… பகீர் கிளப்பும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 65 வயதான சூர்ஜியா பாய் ஜாதவ் என்ற மூதாட்டி உயிர் பிழைப்பதற்காக காட்டு நரியுடன் நேருக்கு நேர் மோதி சுமார் 30 நிமிடம் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருகாதி கிராமத்தை சேர்ந்த அந்த மூதாட்டி கடந்த திங்கட்கிழமை கால்நடைகளுக்கு புல்வெட்டி சென்றபோது பாலம் அருகே திடீரென்று ஒரு காட்டுனரி அவரை தாக்கியுள்ளது. அந்த தாக்குதலில் அவர் கால்களில் கடிபட்டது. அவர் கூச்சலிட்ட போதும் அந்த சமயத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மூதாட்டி தைரியமாக நரியின் வாயை கைகளால் இருக்க பிடித்துள்ளார்.

நரி மேலும் தாக்க முயன்ற போது அவர் அதன் மேல் அமர்ந்து தாடைகளைப் பிரித்து கட்டுப்படுத்தினார். பிறகு தன்னுடைய புடவையை கயிறு போல பயன்படுத்தி நரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு போராடிய தன் உயிரை காப்பாற்றிக்கொண்டார். உடனே தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் மயக்கம் அடைந்து ரத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமாக உள்ளதாக தெரிகிறது. மூதாட்டியின் உறுதியான மனநிலை மற்றும் தைரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.