“டேய் தம்பிகளா, என்னடா பண்றீங்க”.. ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்… இணையத்தை அலறவிடும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புது மார்க்கெட் பகுதியில் இருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். அந்த காட்சியை பதிவு செய்து ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் பேருந்தில் இருக்கைகள் இருந்தாலும் பேருந்தின் படியிலேயே தொங்கியபடியும், மோட்டார் சைக்கிளில் இவ்வாறு ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வதும் தொடர்கதையாகி விட்டது என பலரும் கூறுகின்றனர். இதனால் கல்லூரி நேரங்களில் இந்தப் பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.