சாதிக்க வயது ஒரு தடையா?.. 80 வயதில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதியவர்.. இளசுக்களை வியக்க வைக்கும் சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 11, 2025

Spread the love

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 80 வயது முதியவர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 1957-இல் ஐந்தாம் வகுப்பு முடித்த கோபி தாஸ். கால சூழ்நிலையால் சில வருடங்கள் பள்ளிக்குச் செல்ல வில்லையாம். பல ஆண்டுக்குப் பிறகு 7 மற்றும் 10ஆம் வகுப்புக்கான படிப்பை முடித்துள்ளார். தற்போது இணைய வழியாக படித்து பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளார் கோபி தாஸ். இவர் படிப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். தினமுமே இரண்டு மணி நேரமாவது படிப்பாராம். அவருடைய பேரக்குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யும் போது இவரும் சேர்ந்து படிப்பாராம்.

இதைப் பற்றி கோபிதாஸிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் கனவு. என்னுடைய ஆசிரியர்களும் நீ படித்த வழக்கறிஞராக வேண்டும் என்று கூறினார்கள். எனக்கும் வழக்கறிஞராக வேண்டும் என்றது ஆசை. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இரண்டாவது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறாராம்.